சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

23.3.11

ஒன் மேன் ஆர்மி..!!




எவன் எப்டி போனா எனக்கென்ன..?! இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். ஏன் இவன் பிளாக்குக்கு வந்ததுக்கு நம்மள இப்டி திட்றான்னு தப்பா நெனச்சிக்காதீங்க....ஹி.ஹி..ஹி... இப்படிதான் சுயநலமா மாறிகிட்டு வருது நம்ம உலகம். எத்தனையோ போர்கள்,இயற்கை பேரழிவுகள் வந்து மனுசங்க கஷ்டப்படறாங்க.. ஜப்பான் சுனாமியெல்லாம் பாத்தா ரொம்ப பாவமா இருக்குங்க...அறிவு அதிகமா இருக்கற மக்களான அவங்க அதை எதிர்கொண்ட விதத்தை பாத்தா சிலிர்ப்பா இருக்கு.நம்ம ஊர்ல இந்தமாதிரி ஏதாவது நடந்திருந்து இந்த மாதிரி நிவாரணம் கொடுக்கறதுக்கு ஏதாவது முகாம் போட்டாங்கண்ணா பத்து பேர் செத்து போற அளவுக்கு நெரிசல் உண்டாக்கிருவாங்க...ஆனா,அந்த பயபுள்ளைங்க இவ்ளோ நடந்தும் கட்டுப்பாட்டோட எப்டி இருக்காங்கன்னு தெரியல...இதெல்லாம் ஜீன்லயே வரணும் போலருக்கு.சீக்கிரமா இந்த அழிவிலிருந்து மீண்டு வருவாங்க...



உயர்திரு.டிராபிக் ராமசாமி அவர்களை பத்தி பத்திரிக்கைகள்ல கேள்விப்பட்ருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.பொதுநலம் பொதுநலம்ன்னு இந்த அரசியல்வியாதிங்க கூவறாங்க பாருங்க... அதெல்லாம் டூப்.உண்மையிலயே இவர் செய்றதுதாங்க பொதுநலம்.நம்பல்லாம் ப்ளாக்ல ப்ரொபைலை மறைச்சி அரசியல்வாதிகள கன்னாபின்னான்னு திட்டி எழுதறோம்.ஆனா,இவரு வெளிப்படையா செஞ்ச பொதுநல காரியங்களால் இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடற அளவுக்கு ஆகிப்போச்சு. நம்மல்லாம் டிராபிக்ல மாட்டிக்கிட்டோம்ண்ணா நமக்கு BP எகிர்ற அளவுக்கு மத்தவங்கள திட்டுவோம்.ஆனா இவரு 75 வயசிலயும் சாலையில இறங்கி டிராபிக்க சரிபண்ண ஆரம்பிச்சிடுவாரு.பெயர்க்காரணம் இதுதான்.தனியாளா யாருக்கும் பயப்படமா பல சமூகநல வழக்குகளையும் வக்கீல்களே இல்லாமல் இவரே வாதாடி ஜெயிச்சிருக்காரு.ஏற்கனவே ஏதோ ஒரு தேர்தல்ல வேட்பாளரா நின்னு தோத்துப்போயிட்டாரு.இப்ப பரபரப்பான ஏரியாவான தியாகராயநகரில் சுயேட்சையாக நிக்கறாரு.அவரோட தைரியத்த நினைச்சு பெருமையாவும் ஆச்சர்யமாவும் இருக்கு.எப்படியும் தி.நகர்ல இருக்கற வணிகப்பெருந்தலைகள் இவர ஜெயிக்க விட மாட்டாங்க.சாதாரண பொதுஜனமா இருக்கும்போதே இவரோட குடைச்சல் தாங்கல...இன்னும் MLA ஆயிட்டாருண்ணா சொல்லவே வேண்டாம்.எனக்கு சேலத்திலதான் ஓட்டு.இவருக்காக எப்படியாவது போய் கள்ள ஓட்டாவது போடணும்ன்னு ஆசைப்படறேன்.

தேர்தல் சீஸன் களைகட்டுது.நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு வடிவேல் பண்ற காமெடி சிறப்பா இருக்கு.சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் தேர்தல் சம்பந்தமான (கீழே இருக்கற சுட்டியை கிளிக் பண்ணி) கவிதைய படிச்சி பாருங்க...செம நக்கல் பண்ணியிருப்பாரு அரசியல்வியாதிகளை.
அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்



Post Comment

21 comments:

  1. நல்லவர்களை வாழ்த்துவார்களே தவிர வாழவிடமாட்டார்கள் தமிழர்கள்

    ReplyDelete
  2. @ ப்ரியமுடன் வசந்த்

    சரியா சொன்னீங்க பாஸ்..!! :)

    ReplyDelete
  3. ஏற்கனவே ஏதோ ஒரு தேர்தல்ல வேட்பாளரா நின்னு தோத்துப்போயிட்டாரு.


    ......என்ன கொடுமைங்க இது!

    ReplyDelete
  4. /*
    நல்லவர்களை வாழ்த்துவார்களே தவிர வாழவிடமாட்டார்கள் தமிழர்கள்
    */

    என்ன அருமையான(உண்மையான) வரிகள்.

    டிராபிக் ராமசாமிக்கு வாழ்த்துக்கள். ஜெயிக்க முடியாட்டாலும் நிற்கும் தைரியத்தை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும்.

    பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

    ReplyDelete
  5. அவர் மாதிரி மனிதர்கள் அடையாளம் காணப்படாமலே போயிடறாங்க . அதுதான் பிரச்சினை. நானும் சென்னைல இருந்த அவருக்கு ஒட்டு போடலாம் :-)

    ReplyDelete
  6. இவரைபற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருக்கிறேன். நல்ல மனிதர்.

    ReplyDelete
  7. எனக்கு தெரிந்த வரை இவா்தான் மனிதன்

    ReplyDelete
  8. ethanai thunichal ivaruku...intha vayadhilum podhunalam podhunalam enru odukirar. chennaiyil road aakiramippu panni katapata pala katatangalai idika soli case file panni athil vettrium petrullar

    ReplyDelete
  9. அவரின் தைரியத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. @ chitra

    கொடுமைதாங்க என்ன பண்றது..?! :(

    @ பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

    வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி..!! :)

    @ கோமாளி செல்வா

    வாங்க செல்வா.. மகிழ்ச்சி..!!

    ReplyDelete
  11. @ பாலா
    கருத்துரைக்கு நன்றி பாலா..!!

    @raghavan salem
    வாடா நண்பா..!! :)

    @இராக்கெட் இராஜா
    பேர பாத்தா செம ஜாலியான மனுசனா இருப்பீங்க போல...அடிக்கடி வாங்க ராசா..!! :)

    ReplyDelete
  12. @ சி.பி.செந்தில்குமார்
    வாங்க சி.பி..!! :)

    @ எஸ்.கே
    நிச்சயமா.. :)

    ReplyDelete
  13. @இராக்கெட் இராஜா
    பேர பாத்தா செம ஜாலியான மனுசனா இருப்பீங்க போல...அடிக்கடி வாங்க ராசா..!! :)

    kandipa nanbare thangaludaya padhivukalai padika mattuae seithullen aanal ithuvarai pinnutam iitathillai

    ReplyDelete
  14. ஜெயிக்க போராடுவோம் ...

    ReplyDelete
  15. //பல்லும் நகமும் தவிர, வேற்று ஆயுதம் உண்டா நமக்கு? உண்டு. வாக்குச் சீட்டு என்பது. ஆனால், உடைவாள்கொண்டு முதுகு சொறிபவர் நாம். நாகாஸ்திரம், பாசுபதாஸ்திரம் கொண்டு புளியங்காய் அடிப்பவர் நாம். நமது ஆயுதத்துக்குத் தெரு நாய்கூட அஞ்சுவதில்லை.//

    டிராபிக் அய்யாவிற்கு வாழ்த்துக்கள். (மீண்டும் வசந்தின் கமென்ட் படிக்கவும். நான் தமிழன்)

    ReplyDelete
  16. அருமை நண்பா..
    ராமசாமி சார் வெற்றி பெற வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  17. @ இராக்கெட் இராஜா
    அப்பப்ப வந்து போங்க ராஜா..!! :D

    @ அரசன்
    விட மாட்டாங்க சார்..!!இருந்தாலும் அவரோட தைரியம்தான் பாராட்டுக்குரியது.அப்படியே MLA ஆயிட்டாலும் மத்தவங்களை விட சிறப்பா செயல்படுவாரு..அது உறுதி.

    ReplyDelete
  18. @ கலாநேசன்
    கவிதை அருமைண்ணே.வாழ்த்தவாச்சும் செய்றாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.என்ன பண்றது..?! :(

    @ டக்கால்டி
    நிச்சயம் நண்பரே..!! :)

    ReplyDelete
  19. ஜெயிச்சா நல்லாத்தான் இருக்கும்... ஆனா ஜெயிக்க விட மாட்டாங்களே...

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!